திருத்தணி நவம்பர் 17- திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் திருத்தணி ம.பொ.சி சாலையில் உள்ள பல்வேறு கடைகளில் திடீர் பரிசோதனை செய்து அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப் படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
அப்போது திருத்தணி ம பொ சி சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் ஓட்டல் மற்றும் கறி விற்பனை கடை ஆகியவற்றில் பிளாஸ்டிக் டம்லர்கள் பிளாஸ்டிக் பேபர்கள் மற்றும் இதர பிளாஸ்டிக் பைகள் ஆகியவை பயன் படுத்தப் படுவது அறிந்து நகராட்சி அதிகாரிகள் அங்கு இருந்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தார்