திருத்தணி டிசம்பர் 16 திருத்தணி நகரில் திருத்தணி டிவிஷனில் உள்ள பல்வேறு பகுகுதிகளிலும் இன்று பலத்த மழை பெய்தது.நேற்று இரவு முதல் வானத்தில் மேக மூட்டம் ஏற்பட்டு சில் என காற்று வீசதொடங்கியது.பிறகு காலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருத்தணியில் உள்ள சாய்பாபா நகர், ராஜிவ் காந்தி நகர், ம பொ சி சாலை ,காந்தி ரோடு கீழ் பஜார் சாலை அரசு மருத்துவ மனை பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
கழிவுநீர் கால்வாய்களில் போதிய அளவில் தூர்வாராததால் கால்வாய்கள் மழை நீர் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திருத்தணி பஜார் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தின்மீது மழை வெள்ளம் ஓடியதால் மின்சார ரெயில்கள் மற்றும் கூட்ஸ் ரயில்கள் மெதுவாக சென்றது.அந்த பகுதியில் கடந்து செல்ல மாணவ மாணவிகள் பெண்கள் மிகவும் சிரம பட்டனர். மழையின் காரணமாக திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை குளத்திற்கும், திருத்தணி நகராட்சிக்கு சொந்தமான நல்லான் குள த்திற்கும் அருகில் உள்ள பச்சரிசி மலைகளில் இருந்து மழைநீர் வந்து சேர்ந்தது. தற்போது பெய்தமழையின் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.