

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள தேர் வீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய தரிசன வழி ஏற்பாடுகளை கோவிலின் உள்ளே இருந்தவாரே கண்காணித்து உரிய முறையில் மாற்றி அமைப்பது,
பக்தர்களின் பாதுகாப்பு கண்கானிப்பது, மற்றும் பக்தர்களிடம் இருந்து திருடும் குற்றவாளிகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் உள்ள அணைத்து பிராகாரங்கள் மற்றும் சன்னதிகளில் ஏறகனவே சிசி டிவி கேமராக்கள் பொறுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.