Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

திருத்தணியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை

Tiruttaninews.com
திருத்தணி ஜனவரி 2 :திருத்தணி ஒன்றியத்துக்கு உட்படட ஓட்டு எண்ணிக்கை
திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் பலத்த போ லிஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பாதுகாப்பு அறையில் இருந்து ஓட்டு பெட்டிகள் ஒன்றிய வார்டுகள் வாரியாக ஓட்டுகள் எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை ஓட்டு எண்ணும் அலுவலர்கள் முறைப்படி திறந்து அவற்றை எண்ண தொடங்கினார்கள். காலை முதல் தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை மிகவும் மந்தமாக நடந்தது. மதியம் 12 மணியில் இருந்து தான் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சியர்களின் பெயர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெயர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப் பட்டது.
tiruttaninews.com tiruttaninews.com
மாலை 6 மணி அளவில் 4 ஒன்றிய கவுன்சிலர்கள்  ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் சில வார்டு உறுப்பினர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மீதி உள்ள 8 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 23 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்காளுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிய இரவு 2 மணிக்கு மேல் அகும் என தெரிய வந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, திருத்தணி ஒன்றியத்தில் பி.ஆர் பள்ளி கவுன்சிலராக திமுக வேட்பாளர் நீலா.மத்தூர் கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் பூங்கொடி ,முரக்கம்பட்டு மற்றும் அலமேலு மங்காபுரம் கவுன்சிலராக சுயேட்சை வேட்பாளர் தங்கதனம் மற்றும் தரணிவராகபுரம் கவுன்சிலராக திமுக வேட்பாளர் வள்ளியம்மா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு வெற்றிபெற்றதற்க்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்க்கிடையில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவாளர்களுடன் திருத்தணி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாரைதப்பட்டைகளுடன் நடனமாடி வெற்றியை கொண்டாடினார்கள்.