திருத்தணியில் காங்கிரசார்‌ ஆர்பாட்டம்‌

Tiruttaninews.com

தமிழகத்தில்‌ விவசாயிகள்‌ மற்றும்‌ அடித்தட்டு மக்களின்‌ பயன்பாட்டில்‌ இருந்து வரும்‌ ‌ இலவச மின்சார திட்டம்‌ மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார சட்ட திருத்தத்தத்தால்‌ தமிழகத்தில்‌ இலவச மின்சார திட்டமானது ரத்து ஆகிவிடும்‌ என்றும்‌ ஆகவே அந்த திட்டத்தை மத்திய அரசு வாபஸ்‌ பெறவேண்டும்‌ என வலியுறுத்தி திருத்தணி நகரம்‌ மற்றும்‌ வட்டார காங்கிரஸ்‌ சார்பில்‌ இன்று காலை திருத்தணியில்‌ உள்ள நகராட்சி அலுவலகம்‌ மற்றும்‌ சோளிங்கர் சாலை சந்திப்பு சாலை ஆகிய இடங்களில்‌ கண்டன ஆர்பாட்டம்‌ நடத்தப்‌பட்டது. இந்த ஆர்பாட்டத்தில்‌ திருத்தணி நகர காங்கிரஸ்‌ கட்சி தலைவர்‌ பார்திபன்‌ ஒன்றிய தலைவர்‌ முருகன்‌. மாவட்ட பொது செயலாளர்‌ தியாகராஜன்‌. மாவட்ட செயலாளர்‌ ஜாகீர்‌ உசேன்‌ மற்றும்‌ பலர்‌
கலந்துகொண்டு ஆர்பாட்டம்‌ நடத்தினார்கள்‌. இதையொட்டி அங்கு திருத்தணி இன்ஸ்பெக்டர்‌ தலைமையில்‌ அங்கு போலீஸ்‌ பாதுகாப்பு
போடப்‌ பட்டிருந்தது.