Namma Tiruttani @tiruttaninews

திருத்தணியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைக்கு சீல், ரூ. 2 லட்சம் அபராதம்

Tiruttaninews.com

திருத்தணி நவம்பர் 10- திருத்தணியில் உள்ள அக்கய்ய நாயுடு ரோட்டில்தணிகாசல அம்மன் கோவில் அருகே ஒரு கடையில் அதிக அளவில் !பிளாஸ்டிக் பொருட்கள் விற்க்கப்பட்டு வருவதாக திருத்தணி நகராட்சிஅலுவுலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி திருத்தணிநகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மேலாளர் தங்கராஜ் சுகாதார அலுவலர்மாரிமுத்து மேற்பார்வையாளர்கள் குணசேகரன் ஜெயபால் ரவிக்குமார் ஆகியோர் உடனடியாக அங்கு சென்று அந்த கடையிலும் மற்றும் அதன்கொடவுனிலும் சோதனையிட்டனர்

அப்போது அங்கு அதிக அளவில்அரசால் தடைசெய்ப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைத்திருப்பதுஅறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதையொட்டி திருத்தணி நகராட்சிஆணையர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில் அந்த கொடவுன் உடனடியாகமூடப் பட்டு அதற்க்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இதன் தொடர்பாகஅந்த கடையின் உரிமையாளருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.