திருத்தணியில்‌ 100 ஆண்டுகள்‌ பழைமையான ஆலமரம்‌ முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிப்பு.

Tiruttaninews.com

திருத்தணியில்‌ உள்ள சித்தூர்‌ சாலையில்‌ அமிர்தாபுரம்‌ அருகே 100 ஆண்டுகள்‌ வயது கொண்ட படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம்‌ உள்ளது. இந்த ஆலமரத்தின்‌ கிளைகள்‌ பெரிய அளவில்‌ இருந்து அந்த பகுதியில்‌ நிழல்‌ தருகிறது. இந்த நிலையில்‌ இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில்‌ ஆலமரத்தின்‌ உயரமான மேல்‌ பகுதியில இருந்து திடீரென பலத்த சத்தத்துடன்‌ மரத்தின்‌ பெரிய கிளைகள்‌ முறிந்து சாலையில்‌ விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில்‌அங்கு வாகன போக்குவரத்து மற்றும்‌ ஆள்‌ நடமாட்டம்‌ இல்லாததால்‌ யாருக்கும்‌ பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால்‌ அங்கு சாலையோரத்தில்‌ நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்‌ ஆலமரம்‌ முறிந்து விழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார்‌. இதை பார்த்த அந்த பகுதி பொது மக்கள்‌ உடனடியான அவரை அங்கிருந்து தூக்கி சென்று காப்பாற்றினார்கள்‌. இதனால்‌ பெரிய ஆபத்து தவிர்க்கப்‌பட்டது. மேலும்‌ இந்த சம்பவத்தால்‌ இருபுறமும்‌ ஏராளமான வாகனங்கள்‌ செல்லமுடியாமல்‌ அங்கேயே நின்று விட்டது. ஆலமரம்‌ முறிந்து விழுந்த சம்பவம்‌ பற்றி அறிந்த நெடுஞ்சாலை துறையினர்‌ அங்கு வந்து ஜேசிபி இயந்திரம்‌ கொண்டு ரோட்டில்‌
இருந்த மரத்தை சாலையில்‌ இருந்து அப்புறப்‌படுததினார்கள்‌. இதை தொடர்ந்து திருத்தணி நகராட்சி அலுவலர்கள்‌ அக்கிளைகளை அப்புறப்‌ படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்‌. அதன்‌ பிறகு திருத்தணி -சித்தூர்‌ சாலையில்‌ போக்குவரத்து தொடங்கியது . இந்த சம்பவத்தால்‌ அந்த பகுதியில்‌ இரண்டு மணி நேரத்துக்கும்‌ மேலாக வாகன போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.