Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

திருத்தணியில்‌ தேசிய மக்கள்‌ நீதிமன்றம்‌,2 கோடியே 58 லட்சத்து 29 ஆயிரத்து 200 ருபாய்கள்‌ நிவாரண தொகையாக வழங்க ஏற்பாடு செய்யப்‌பட்டது.

Tiruttaninews.com

திருத்தணியில்‌ உளள்‌ ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில்‌
லோக்‌ அதாலத்‌ எனப்படும்‌ தேசிய மக்கள்‌ நீதி மன்றம்‌ நடத்தப்‌ பட்டது.
இதையொட்டி சிவில்‌, கிரிமினல்‌. வழக்குகள் மற்றும்‌ மோட்டார்‌ வாகன விபத்து
ஆகியவற்றுக்கு சம்பந்தப்‌ பட்ட வழக்குகள் என 61 வழக்குகள் விசாரணைக்கு
ஏற்றுக்கொள்ளப்‌ பட்டது. இந்த வழக்குகள்‌ தொடர்பாக வாதி பிரதிவாதிகள்‌
மற்றும்‌ அவர்களது வழக்கறிஞர்கள்‌ ஆகியோர்‌ ஆஜராகி இருந்தனர்‌. இந்த
வழக்குகளை மாவட்ட கூடுதல்‌ அமர்வு நீதிபதி பரணிதரன்‌, திருத்தணி
ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின்‌ சார்பு நீதிபதி உமா, நீதித்துறை நடுவர்‌
லோகநாதன்‌ ஆகியோர்‌ தலைமையில்‌ விசாரணைகள்‌ நடத்தி 61
வழக்குகளுக்கும்‌ உரிய தீர்வு காணப்பட்டது. இதை தொடர்ந்து இந்த
வழக்குகள்‌ தொடர்பாக 2 கோடியே 58 லட்சத்து 29 ஆயிரத்து 200 ருபாய்கள்‌
பாதிக்ப்‌ பட்டவர்களுக்கும்‌ பயனாளிகளுக்கும்‌ நிவாரண தொகையாக வழங்க
ஏற்பாடு செய்யப்‌பட்டது.