Namma Tiruttani @tiruttaninews

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் !!

Tiruttaninews.com

ஏமனை தவிர அனைத்து வளைகுடா நாடுகளிலும் அமெரிக்க படை தளங்கள் உள்ளன, இதில் மத்திய கிழக்கு பகுதியை சேர்த்தால் ஈராக்கிலும், ஜோர்டானிலும் தளங்கள் மற்றும் வீரர்கள் உள்ளனர்.

மத்திய தரைக்கடல் பகுதியை எடுத்து கொண்டால் துருக்கியில் அமெரிக்க விமானப்படையின் தொலைதூர குண்டுவீச்சு , இதர போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் டேங்கர் விமானங்கள் இன்சிர்லிக் விமானப்படை தளத்தில் உள்ளது, குறிப்பாக இங்கு 50 பி61 ரக அணுகுண்டுகள் உள்ளன மற்றும் ஈரானை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் அமெரிக்க தளங்கள் உள்ளன, ஆகவே
ஈரான் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் உள்ளது.

குறிப்பாக பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் மிகப்பெரிய அமெரிக்க கடற்படை தளம் உள்ளது, இந்த தளம் அமெரிக்க கடற்படையின் மத்திய கட்டளையகம் (உலகின் இந்த குறிப்பிட்ட பகுதிக்கு பொறுப்பான கட்டளையகம்) மற்றும் 5ஆவது கடற்படை பிரிவின் தலைமையகமாகவும் விளங்குகிறது. 2001 ஆபரேஷன் என்டுயரிங் ஃப்ரீடம் (ஈராக் யுத்தம்) இங்கிருந்து தான் தொடங்கப்பட்டது, அமெரிக்க கடற்படையின் ராட்சத விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள் ஈராக் படைகளை துவம்சம் செய்த பின்னரே அமெரிக்க மற்றும் பிரித்தானிய தரைப்படைகள் ஈராக் உள்ளே நுழைய தொடங்கின.

இது தவிர்த்து ஒட்டுமொத்த நேட்டோவும் அமெரிக்காவுடன் ஈரானுக்கு எதிராக களம் இறங்கினால் ஏற்கனவே ஈராக், சிரியா, பஹ்ரைன், கத்தார், ஒமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் படைதளங்களை கொண்டுள்ள இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளும் அங்கு படைதளங்களற்ற மற்ற நேட்டோ நாடுகள் இந்த தளங்களை பயன்படுத்தி கொண்டு போருக்கு தயாராகலாம்.

மேலும் தென்கொரியா மற்றும் ஜப்பானில் முறையே உள்ள 25,000 மற்றும் 50,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை தனது மாபெரும் விமானப்படை மற்றும் கடற்படையின் உதவியோடு அதிகப்பட்சமாக ஒரு வாரத்திற்குள் இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவால் நகர்த்த முடியும்.

ஆகவே போர் வந்தால் ஈரானுக்கு தோல்வி நிச்சயம் அதே நேரத்தில் போர் வருமா எனபது ஈரானின் நடவடிக்கையை பொறுத்தது ஆகும். ஆனால் நிச்சயமாக அது மூன்றாவது உலகப்போராக இருக்காது என்பது நிச்சயம் !!