Namma Tiruttani @tiruttaninews

விதிகளை மீறிய இரு சக்கர வாகனங்கள்‌ பறிமுதல்‌

Tiruttaninews.com

திருத்தணி ஏப்‌22- கொரோனோ பாதிப்பு தொடர்பாக மத்திய மாநில அரசுகள்‌ எடுத்து வரும்‌ நடவடிக்கைகளில்‌ ஒன்றாக தற்போது 144 தடை உத்தரவு அமலில்‌ இருக்கும்‌ நிலையில்‌ திருவள்ளூர்‌ மாவட்ட போலீஸ்‌ எஸ்பி அரவிந்த்‌ உத்தரவின்‌ பேரில்‌ திருத்தணி டிஎஸ்பி சேகர்‌ மேற்பார்வையில்‌ ,திருத்தணி இன்ஸ்பெக்டர்‌ ரமேஷ்‌ மற்றும்‌ போலீசார்‌ திருத்தணி நகரில்‌ இருசக்கர வாகனங்களில்‌ திரியும்‌ நபர்களை நிறுத்தி அவர்களிடம்‌ விசாரணை நடத்தி அவர்கள்‌ தேவையில்லாமல்‌ இருசக்கர வாகனங்களில்‌ வெளியில்‌ வந்தது தெரிந்ததால்‌ அந்த வாகனங்களை பறிமுதல்‌ செய்து வழக்குகள்‌ பதிவு செய்து வருகிறார்கள்‌. இதுவரை 300க்கும்‌ மேற்பட்ட வாகனங்கள்‌ பறிமுதல்‌ செய்யப்‌ பட்டு அவற்றின்‌ மீது வழக்குகள்‌ “பதிவு ‌ செய்யப்‌பட்டுள்ளது. பறிமுதல்‌ செய்யப்‌பட்ட வாகனங்கள்‌ அனைத்தும்‌ தற்போது திருத்தணியில்‌ உள்ள டாக்டர்‌ ராதாகிருஷ்னன்‌ அரசினர்‌ மேல்‌ நிலைப்‌பள்ளி வளாகத்தில்‌ போலீஸ்‌ பாதுப்புடன்‌ வைக்கப்‌பட்டுள்ளது. பறிமுதல்‌ செய்யப்‌பட்ட இரு சக்கர வாகனங்கள்‌ குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு
சட்டப்படி விடுவிக்கப்‌ படும்‌ என தெரிவிக்கப்‌பட்டுள்ளது.