Namma Tiruttani @tiruttaninews
tiruttani 1

தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தகவல்

Tiruttaninews.com

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலைஅலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில்பிரதி வெள்ளிக்கிழமை தோறும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 01.11.2019,08.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் 28 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வரும் 22.11.2019 அன்று திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன்பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறஉள்ளது இதில் பல தனியார் துறை நிறுவனங்கள்கலந்துகொள்ள உள்ளன. இவை வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். எனவே, மேற்காணும் கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.11.2019 வெள்ளிக்கிழமை காலை மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகபதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் மாவட்டஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தெரிவித்தார்.