Namma Tiruttani @tiruttaninews
tiruttani news

தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Tiruttaninews.com

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின்சார்நிலைஅலுவலகங்கள் அனைத்துமாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்களில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் சிறு அளவிலான வேலைவாய்ப்புமுகாம் நடைபெறுகிறது. அதனடிப்படையில் வரும் 10.01.2020 அன்று திருவள்ளூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறு அளவி வேலைவாய்ப்புமுகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பலதனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இவை வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம்வகுப்பு, 12-ஆம் வகுப்பு. பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

எனவே மேற்காணும் கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.01.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும்.
இத்தனியார் வேலைவாய்ப்பு முகாம் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மகேஸ்வரிரவிக்குமார் ,IAS அவர்கள் தெரிவித்தார்.